சனிக்கிழமை இரவுகளும் சாலைப் பயண அச்சங்களும்: டாக்டர் ராமதாஸின் சுளீர் பதிவு
வசதி படைத்தவர்களின் கொண்டாட்டங்களுக்காக அப்பாவிகள் உயிரிழப்பது தொடர்கதையாவதை அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மது விருந்துக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் சனிக்கிழமை இரவுகளும், சாலைப் பயண அச்சங்களும்! மது விருந்து கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும்!! என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தானிகள் மீது குடிபோதையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த மகிழுந்து மோதியதில் பல தானிகள் சேதமடைந்தன. 6 ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஒரு ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர். 5 ஓட்டுனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர் மரணம்
உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி மாணவர்கள் போதை
இந்த கொடிய விபத்துக்குக் காரணமானவர்கள் சென்னையில் உள்ள கட்டுப்பாடு மிக்க கல்லூரியின் மாணவர்கள் ஆவர். அக்கல்லூரியின் மாணவர்களே குடித்து விட்டு போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

வாகன விபத்துக்கள்
சென்னையில் இப்போது வார இறுதி கொண்டாட்டங்கள் என்ற புதியக் கலாச்சாரம் உருவாகி வருகிறது. சனிக்கிழமை இரவுகளில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி கூத்தடிப்பதும், பின்னர் அதே போதையில் வாகனங்களை ஓட்டி சாலையோரம் வசிக்கும் மக்கள் மீதும், ஆட்டோக்கள் மீதும் மோதி உயிரிழப்புகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தொடர்கதையாகும் விபத்து
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் புதல்வர் அவரது நண்பருடன் மது அருந்தி விட்டு வேகமாக காரை ஓட்டி வந்து இதே இராதாகிருஷ்ணன் நகர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியதில் ஒரு ஓட்டுனர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஆடி கார் விபத்து
கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் கிழக்கு கடற்கரைச்சாலையில் ஒரு பெண் மது போதையில் வேகமாக காரை ஓட்டி வந்து சாலையோரம் நின்ற கூலித் தொழிலாளி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.
பணக்கார குடும்பத்தினர் கொலை
இத்தகைய விபத்துக்களால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவுகளில் சாலைகளில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. பணக்காரக் குடும்பத்தினர் தங்களின் மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும் மது அருந்தி விட்டு சாலையோரம் வசிக்கும் அப்பாவிகளையும், ஆட்டோ ஓட்டுனர்களையும், சாலையில் பயணிக்கும் ஏழைகளையும் கார் மோதி கொலை செய்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது.

விடிய விடிய கொண்டாட்டம்
சாதாரண சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஏழைகளை துரத்திப் பிடித்து தண்டிக்கும் காவல்துறை, இத்தகைய குற்றங்களைத் தடுக்கவோ, அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வருவதில்லை. அரசு மதுக்கடைகளின் விற்பனை நேரம் இரவு 10 மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 12.00 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பல நட்சத்திர விடுதிகளில் காவல்துறை உதவியுடன் விடிய, விடிய மது ஆறாக ஓட அனுமதிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களின் கொண்டாட்டங்களுக்காக அப்பாவிகள் உயிரிழப்பது தொடர்கதையாவதை அனுமதிக்கக்கூடாது.

ரூ. 1 கோடி இழப்பீடு தேவை
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மது விருந்துக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி மாணவர் குடிபோதையில் ஓட்டிய மகிழுந்து மோதி உயிரிழந்த தானி ஓட்டுனரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதை அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்திடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications