குறைந்த ரத்த அழுத்தம்... தீவிர சிகிச்சைப் பிரிவில் ராமகோபாலன் - உடல் நிலையில் முன்னேற்றம்

நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் கணபதியில் உள்ள இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணக்குமார் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் தீடீரென ராமகோபாலனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்ட அவரை நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில் அழைத்துச் சென்றனர்.
அங்கு ராமகோபாலனின் உடல்நிலையைச் சோதித்த மருத்துவர்கள், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று மாலை அல்லது நாளை ராமகோபாலன், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ராமகோபாலன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications