சாலை விபத்தில் சிக்கி காப்பாற்ற ஆளில்லாமல் தத்தளித்த "ரஜினி" ராமகிருஷ்ணன்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் இவரை அதிகமாக காண முடியும். பெயர் ராமகிருஷ்ணன். குருக்களாக பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் ரஜினி சிவன் வேடத்தில் பைக்கில் வர, அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு வருவாரே.. அவரேதான். அவருக்கு போறாத வேளை, சாலை விபத்தில் சிக்கி தட்டுத் தடுமாறி விட்டார் பாவம்.
சென்னை வடபழனி பஸ் நிலையம் அருகே விஜயா மருத்துவமனைக்கு அருகே இன்று காலை மொபெட்டில் போய்க் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதி விட கீழே விழுந்தார் ராமகிருஷ்ணன்.

விழுந்த வேகத்தில் எழ முடியவில்லை அவரால். அப்போது அந்த வழியாக வந்த விகடன் செய்தியாளரும், புகைப்படக் கலைஞரும் சேர்ந்து அவரை தூக்கி பிளாட்பாரத்தில் அமர வைத்தனர். மேலும் சிலரும் சேர்ந்தனர்.
தலையில் அடிபட்டதால் அவருக்கு வாந்தி வந்தது. தொடர்ந்து வாந்தி எடுத்தபடி இருந்தார். கூட்டம் கூடியவர்கள் பலரும் அவர் ரஜினி படத்தில் நடித்தவர்தானே என்று பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யாரும் முயலவில்லை. 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தும் அது வரவில்லை. வருவது போலவும் தெரியவில்லை.
வருவதற்கு ஒரு மணி நேரமாகும் என்றுதான் தகவல் வந்தது. அருகில் இருந்த போலீஸ் பூத்தும் மூடப்பட்டிருந்தது. டிராபிக் போலீஸாரும் இல்லை. இந்த நிலையில் ராமகிருஷ்ணன் கையில் இருந்த செல்போன் மூலம் உறவினருக்குத் தகவல் கொடுத்து விட்டு ஆட்டோ ஒன்றில் ராமகிருஷ்ணனை ஏற்றி அருகில் இருந்த மருத்துவனையில் அனுமதித்தனர்.
108க்கு என்ன கேடு.. முன்பெல்லாம் உடனே வந்தது.. இப்போது வர மறுக்கிறதே!
படம்: விகடன்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications