ராம மோகன் ராவின் பெர்சனல் பக்கங்கள்... தோழி லலிதா எங்கே?- தேடுதல் வேட்டை
ராம மோகன் ராவின் தோழி லலிதா எங்கே இருக்கிறார் என்று இப்போது தேடத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: ராமமோகன ராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. எல்லோருக்கும் ஒரு பெர்சனல் பக்கம் இருக்கும். ராம மோகன் ராவிற்கும் ஒரு பெர்சனல் பக்கம் உள்ளது. அவர்தான் தோழி லலிதா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில் 25 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள கைப்பற்றப்பட்டன.
18 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. 6 லட்ச ரூபாய் அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பு மிக்க பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் கூறியிருக்கிறார்கள். பரிசுப் பொருட்கள் யாருக்குச் சொந்தமானவை யாரால் அளிக்கப்பட்டது என்பது குறித்து இப்போதைக்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
ராம மோகன் ராவ் அவர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்த பல ஆவணங்கள், அலுவலக அறையில் இருந்து லேப்டாப் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ராம் மோகன் ராவின் செல்போனை ஆராய்ந்த போது அவர் தொழிலதிபர் சேகர் ரொட்டியோடு தொடர்ந்து பேசியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

லேப்டாப்பில் பாஸ்வேர்டு
ராம மோகன் ராவின் லேப் டாப்பை ஆராய்ந்த போது அது பாஸ்வேர்ட் கேட்கவே, அவர் சொல்ல மறுத்துள்ளார். தன்னுடைய பெர்சனல் என்றும் கூறியுள்ளார். ரெய்டு அளவிற்கு வந்த பிறகு பெர்சனல் என்று எதுவும் கிடையாது என்று கூறவே, பாஸ்வேர்டை சொன்னாராம்.

லலிதா யார்?
ராம மோகன் ராவ் சொன்ன பாஸ்வேர்ட் பெயர் பெண்ணின் பெயரை கொண்டதாக இருந்தது. அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்த லலிதா, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தான் தங்கியிருந்தார். ராம மோகன் ராவ் வாங்கிக் கொடுத்த வீட்டில்தான் தங்கியிருந்தாராம் லலிதா. இந்த விவகாரம் ராம மோகன் ராவின் மனைவிக்கு தெரியவர, சிக்கலாகி விட்டதாம்.

நெல்லூருக்கு பார்சல்
லலிதா விவகாரம் பெரிதாகாமல் தடுக்க சென்னையில் இருந்து நெல்லுருக்கு லலிதாவை அனுப்பிவிட்டாராம் ராம மோகன் ராவ். லலிதாவிற்கு நெல்லூரில் வீடு எதுவும் வாங்கி கொடுத்திருக்கிறாரா? என்பது பற்றிய விவரங்களை வருமானவரித்துறையினர் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

லலிதா எங்கே?
ராம மோகன் ராவின் லேப்டாப்பில் முக்கிய ஆவணங்களுடன் லலிதாவைப் பற்றிய தகவல்களும் தனி போல்டரில் இருக்கிறதாம். செல்ஃபி போட்டாக்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்டுக்குப் பின்னர் லலிதா ஆந்திராவில்தான் இருக்கிறாரா? அல்லது வெளிநாடு எங்கும் சென்று விட்டாரா? என்று வருமான வரித்துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications