பிளஸ்டூவில் சாதனை படைத்த 'ஜானகி அம்மாவி'ன் பேத்தி ஸ்ருதி.. 1172 மதிப்பெண் பெற்று அசத்தல்!
ராமநாதபுரம்: இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ருதி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் 1172 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சினிமா பின்னணி பாடகியான இவர் இதுவரை 3 படங்களில் பின்னணி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலும் 7 தமிழ்ப் படங்களில் பின்னணி பாடி வருகிறார்.

உ படத்தில் அறிமுகம்:
பாடகி ஸ்ருதி "உ" படத்திற்காக "திக்கித் தெணறுது தேவதை" என்ற பாடல் மூலமாக தமிழ் திரைக்கு அறிமுகமானவர். இப்பாடல் யூடியூபில் 10 லட்சத்திற்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டிருந்தது.

அகத்திணையில் ஒரு பாட்டு:
மதுரை மாவட்டம், தேசிய செய்திகள், பள்ளிசாலை, சயனம், சாந்தம், ரணம் உட்பட பல படங்களில் பாடியுள்ள பாடகி ஸ்ருதி அகத்திணை படத்தில் இடம் பெற்றுள்ள வைரமுத்துவின் "தந்தையும் நீயே, தாய்மடி நீயே" என்ற பாடலை பாடியுள்ளார்.

தந்தைக்காக ஒரு பாடல்:
தாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.

ஜானகி அம்மாவின் பேத்தி:
தமிழ் சினிமாவில் குழந்தை குரலில் ஜானகி அம்மா தான் பாடி அசத்துவாங்க. அப்படி பார்த்தா உன்னை ஜானகி அம்மா பேத்தின்னு சொன்னாலும் தப்பில்லை என்று சிலர் பாராட்டியதைக் கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கும்ஸ்ருதிக்கு இந்த பிளஸ் 2 வெற்றி டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications