என்ன பிரேமும்மா... இப்படி பண்றீங்களேம்மா..?" விஜயகாந்த் மனைவியை கிண்டலடித்த ராமராஜன்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கல்யாணத்துக்கு தாலி எடுத்துக்கொடுத்த கருணாநிதியையே பிரேமலதா இப்படி வறுத்து எடுக்கலாமா? என்னம்மா பிரேமும்மா... இப்படி பண்றீங்களேம்மா?.... என்று நடிகரும் அதிமுக பேச்சாளருமான ராமராஜன் கிண்டலடித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற அதிமுகவின் சாதனைவிளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ராமராஜன் பிரேமலதாவை கிண்டலடிக்கும் தொணியில் பேசியது அதிமுக தொண்டர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ramarajan

சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபலப்படுத்திய "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்ற வார்த்தை சினிமா, சீரியல்களில் மட்டுமல்லாது அரசியல்வாதிகளிடையேயும் பரவலாக பேசப்படுகிறது.

நமக்கு நாமே பயணம்

தருமபுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன் முதலில் திமுக பொருளாளர் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தைக் கிண்டலடித்தார். "கரும்புத்தோட்டத்துக்குள்ள சிமெண்ட் சாலை போட்டு நடக்குற ஒரே ஆள் ஸ்டாலின்தான் என்று சொன்ன அவர், ஷூ போட்டுக்கிட்டு வயலுக்குள்ள இறங்கி யாரை ஏமாத்துற...? என்று கேட்டார்.

எல்லாம் அம்மா கொடுத்ததுதான்

முடியலைன்னா வீட்டுக்குள்ளயே இருக்கவேண்டியதுதானே. ஸ்டாலின் போய் தெருவோரக்கடையில தோசை சாப்பிடுகிறாராம். அங்க நீங்க சாப்பிட்ட அந்த தோசை, எங்க அம்மா கொடுத்த இலவச கிரைண்டர்ல ஆட்டினது, அதுக்கு தொட்டுக்கிட்ட சட்னி, எங்க அம்மா கொடுத்த இலவச மிக்ஸியில அரைச்சது.

காத்தே அம்மா கொடுத்ததுதான்

அங்க உட்கார்ந்து வாங்குனீங்களே காத்து அது, எங்க அம்மா கொடுத்த இலவச ஃபேன்ல இருந்து வந்தது. இப்படி எங்க பாத்தாலும் அம்மாவின் சாதனைகள்தான். 'முடியட்டும் விடியட்டும்' என்கிறார் ஸ்டாலின். அதன் அர்த்தம் புரியாமல் கருணாநிதியும் அவரை வாழ்த்தி அனுப்புகிறார்.

இப்படி பண்றீங்களேம்மா

விஜயகாந்த் என்ன பேசுகிறார்னே தெரியமாட்டேங்குது. அவர் மனைவி பிரேமலதா ஏதேதோ பேசுறாங்க. உங்க கல்யாணத்துல தாலி எடுத்துக் கொடுத்தது கருணாநிதி. அவரைப்போய் திட்டலாமா.. என்னம்மா பிரேமும்மா இப்படி பண்றீங்களேம்மா..?

நானும் ரவுடிதான்

தேர்தலைப்பற்றி பேசும்போது மழை வருவதற்கு முன், மழை வருவதற்கு பின் என்று சொல்லலாம்.... நாலரை வருஷமா ஓடி ஒளிஞ்சிருந்தவங்க எல்லாம் இப்பதான் நானும் முதலமைச்சர்னு, நானும் ரவுடிதான் வடிவேலு கணக்கா ஓடி வர்றாங்க. ஆனா அ.தி.மு.க மழை, புயல், வெள்ளம் எதுவந்தாலும் சமாளிக்கும் என்று கூறி தனது பேச்சை ஒருவழியாக முடித்தார் ராமராஜன்.

நல்லா பேசறாருப்பா

அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து எதிர்கட்சியினர் பலரும் ரவுண்டு கட்டி அடித்து வரும் நிலையில், அவர்களை சமாளிக்க நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கியுள்ளது அதிமுக. அதிலும், ராமராஜன், விந்தியா, அனிதா குப்புசாமி ஆகியோர்களின் அட்டாக் சும்மா... ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+