சினிமாவுக்குதான் சூர்யா அரசியலில் அம்மாதான் சிங்கம்!- ராமராஜன்
சென்னை: சினிமாவில் சூர்யா சிங்கமாக நடித்திருக்கலாம், அரசியலில் அம்மாதான் சிங்கம் என்றுகூறி நடிகர் ராமராஜன் பிரச்சாரம் செய்தார்.
ஐடி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என மார்டன் சென்னையாக காட்சியளிக்கிறது தென்சென்னை தொகுதி.

இத்தொகுதியில் அதிமுக, திமுக மட்டுமின்றி பாஜகவும் முக்கிய போட்டியாளராக உள்ளன. எனவே விதவிதமான பிரச்சாரங்கள்
இங்கு சூடுபிடித்துள்ளன. அதிமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகர் ராமராஜன், அத்தொகுதியில் திறந்த ஜீப்பில் வலம் வந்தபடி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்த்தனுக்காக வாக்கு சேகரித்தார்.
அவர் பேசுகையில், இந்தியாவை இதுவரை நமது நாடாகத்தான் பார்த்தோம். இனிமேல் அது தாய் திருநாடாகும். 23 தொகுதிகளை வைத்துக்கொண்டே, தேவகவுடா பிரதமரானது வரலாறு. 40 தொகுதியை கைப்பற்றப்போகும் அம்மாவும் பிரதமராக முடியும். சினிமாவில் சூர்யா சிங்கமாக இருக்கலாம். ஆனால் அரசியலில் அம்மாதான் சிங்கம்.
தென்சென்னை தொகுதி தேன் போல இனிக்கும்படி மாற வேண்டுமா, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications