அம்மா ஆட்சியில சாம்பார் சூப்பரா இருக்கு… அதனால ஓட்டு போடுங்க: ராமராஜன்
திருவண்ணாமலை: தமிழக முதல்வர் இலவசமாக கொடுத்த ஆடு, மாடு குட்டிகளை போடும். ஆனால் கருணாநிதி கடந்த ஆட்சியின் போது கொடுத்த டிவி குட்டி போடுமா? என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
அம்மா உணவகம் திறந்து ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், சப்பாத்தி 3 ரூபாய்க்கும், அருமையான சாம்பாரும் வழங்கி வரும் ஆட்சி அம்மா ஆட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தொகுதிவாரியாக பிரசாரம் செய்து வருகிறார். அவரின் பேச்சு பலரையும் யோசிக்க வைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் போட்டு வெளுத்து வாங்குகின்றனர் வாக்காளப் பெருமக்கள் நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்.

தமிழர் பிரதமராக
இது வரை தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட இந்திய பிரதமராக வரவில்லை. இந்த முறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக அரியணை ஏற்றும் வகையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
சிதம்பரம் - வாசன்
இதுவரை மத்தியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வாசன், சிதம்பரம் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட வில்லை. ஏன் போட்டியிடவில்லை? இவர்கள் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது.
தேர்தல் தேதி தெரியலையே
விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின் போது அனைவரும் மே16-ந் தேதி நடை பெறும்தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுங்கள் என கூறியுள்ளார். தேர்தல் தேதியே தெரியாதவர் ஒரு மாநில கட்சியின்தலைவராக உள்ளார். இவருக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதியை தந்தவர் ஜெயலலிதா தான்.
ஆடு மாடு குட்டி போடும்
தமிழக முதல்வர் இலவசமாக கொடுத்த ஆடு, மாடு குட்டிகளை போடும். ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கடந்த ஆட்சியின் போது கொடுத்த டிவி குட்டி போடுமா? ரிப்பேர் வேண்டுமானால் ஆகும்.
சூப்பர் சாம்பார்
அம்மா உணவகம் திறந்து ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், சப்பாத்தி 3 ரூபாய்க்கும், அருமையான சாம்பாரும் வழங்கி வரும் ஆட்சி அம்மா ஆட்சி.
மக்கள் சுபிட்சமா இருக்காங்க
ரேஷனில் 20 கிலோ அரிசி வழங்கி ஏழைகளின் பசியை போக்கியவர் அம்மா. அனைத்து தரப்பு மக்களும் அவரது ஆட்சியில் சுபிட்சமாக உள்ளனர். அவர் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அண்ணாமலையார் அருளால் 40 தொகுதிகளிலும் நாம் அமோக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ராமராஜன் பேசினார்.
நிதியுதவி தந்தவர்
தொடர்ந்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமனை ஆதரித்து பேசிய ராமராஜன், முதல்வர் ஜெயலலிதா, முதியோர் பென்ஷன், திருமண நிதியுதவி, இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு மாடு போன்றவற்றை முதல்வர் வழங்கி உள்ளார்.
விஜயகாந்த் கனவு
விஜயகாந்த் 26 ஆண்டுகள் சினிமாவில் நடித்து சம்பாதித்து விட்டு, இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் கனவு பலிக்காது என்றார் ராமராஜன்












Click it and Unblock the Notifications