கலாம் இறுதிச் சடங்கு: பாதுகாப்புக்காக ராமநாதபுரம்- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பூவுடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் வைக்கப்பட உள்ள மண்டபத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் பொதுமக்களும், 5000க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதாலும், அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் வருகின்ற பொழுது எந்தவித விபத்துக்களும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதாலும் இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்களான பேருந்து, டிராக்டர், லாரி போன்றவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார், பைக் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலம் வருகின்ற போது அந்த போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பல்வேறு ஊர்களில் இருந்தும் குவிந்துள்ள மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications