இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..கரையில் நிற்கும் 800 படகுகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கியுள்ளார்கள். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கேற்ப எந்த ஆட்சி வந்தாலும் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

Rameswaram Fishermen starts strike against Srilankan Navy

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாக சொல்லி இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகிறார்கள். இவ்வாறு கடந்த பிப்.4 ஆம் தேதி இரு விசைப்படகுகளின் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

அவர்களில் இரு மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறையும் விதித்தது. இவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே சில தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டத்தால் 80 விசை படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் மீட்காவிட்டால் வரும் 8ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+