ராம்குமார் தற்கொலை செய்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மட்டும் ரிப்பேர் ஆனது எப்படி?
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் மென் பொருள் பொறியாளர் சுவாதி. பின்னர் இந்த வழக்குத் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று முன்தினம் சிறைவளாகத்திலேயே மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மர்மங்கள்...
சிறைக்குள் கைதி ஒருவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல்முறை. அதோடு, ஏற்கனவே மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கில் தற்போது ராம்குமாரின் மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

சிசிடிவி கேமரா ரிப்பேர்...
இந்நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை, இதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது மேலும் மர்மத்தை அதிகரித்துள்ளது.

கண்காணிப்பு...
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும் கைதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு, சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும். அப்படி இருக்கையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மட்டும் எப்படி பழுதானது.

சந்தேகம்...
அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என பல்வேறு சந்தேகங்கள் முளைத்துள்ளன.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications