பிரான்ஸ் தமிழச்சியின் கருத்தின் அடிப்படையில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்க வக்கீல் வலியுறுத்தல்!!
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் பதிவிட்டிருந்த கருத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் கூறி அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராம்குமார் தரப்போ சுவாதி கொலை வழக்கில் நிறைய பேருக்கு தொடர்பு உண்டு; இதில் ராம்குமார் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டி வருகிறது.

தமிழச்சி கருத்தால் பரபரப்பு
இந்த நிலையில் பிரான்ஸை சேர்ந்த பெரியாரிஸ்டான தமிழச்சி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதியை கொலை செய்தது முத்துக்குமார் என்பவர்தான்... அவர் தற்போது தஞ்சையில் பதுங்கியுள்ளார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளமும் பதிவு செய்திருந்தது.

போலீசார் விசாரிக்க வேண்டும்
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியதாவது:
பிரான்ஸ் தமிழச்சி வெளியிட்ட கருத்துகளுக்கு சுவாதி பெற்றோர் தரப்பில் எந்த பதிலுமே தெரிவிக்கவில்லை. தமிழச்சி தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்த வேண்டும்.

சட்டப்படி தவறு
ராம்குமாரை சிறையில் போலீசார் வீடியோ எடுத்தது அரசியல் சாசன சட்டப்படி தவறானதாகும். இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை தப்பவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் போலீசார் செயல்படுகின்றனர்.

சிபிஐ விசாரிக்க கோரி மனு
சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 17-ந் தேதியன்று ராம்குமாரின் தாயார் வழக்கு தொடர உள்ளார். இவ்வாறு ராமராஜ் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications