சுவாதியுடன் பேஸ்புக்கில் ராம்குமார் "சாட்" செய்ததே இல்லை... ராம்குமார் வக்கீல் பரபரப்பு தகவல்
செங்கோட்டை: சுவாதியுடன் ராம்குமார் பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டது தொடர்பாக, பேசியது தொடர்பா எந்த ஆதாரமும் இல்லை என்று ராம்குமாரின் வக்கீல் ராமராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தை தான் முழுமையாக ஆய்வு செய்து விட்டதாகவும், அதிலிருந்து சுவாதிக்கு எந்தத் தகவலும் போகவில்லை என்றும் ராமாராஜ் கூறியுள்ளார்.
ஆனால் சுவாதியை, பேஸ்புக் மூலமாக நட்பு பிடித்ததாக ராம்குமார் தெரிவித்ததாக முன்பு போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வக்கீல் ராம்ராஜ்
சுவாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் வக்கீலாக தற்போது ராமராஜ் தலைமையிலான வக்கீல்கள் குழு செயல்பட்டு வருகிறது. இவர்கள் ராம்குமார் நிரபராதி என்று கூறி வருகின்றனர்.

மீனாட்சிபுரத்தில் ஆய்வு
இந்த வழக்கில் நுழைந்ததும் வக்கீல் ராமாராஜ், ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்குச் சென்று அவரது பெற்றோர், சகோதரிகளைச் சந்தித்துப் பேசினார். ஊர் மக்களையும் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.

விடை தெரியாத கேள்விகள்
இதுகுறித்து ராமராஜ் கூறுகையில், கடந்த முறை இங்கு வந்து ராம்குமார் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசினேன். தற்போது மீண்டும் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க வந்துள்ளேன். இந்த வழக்கில் பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான விடைகளை தேடி இங்கு வந்துள்ளேன்.

பேஸ்புக்கில் ஆதாரம் இல்லை
ராம்குமாரின் பேஸ்புக் கணக்கை நான் ஆய்வு செய்தேன். அதில் ராம்குமார் பேஸ்புக் மூலம் சுவாதியை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் பல விவரங்கள் இந்த வழக்கில் எனக்கு கிடைத்துள்ளன. அவற்றை இப்போது நான் வெளியிட முடியாது என்றார்.

முரண்பாடாக இருக்கிறதே
முன்னதாக பேஸ்புக் மூலமாகத்தான் சுவாதியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், சாட் செய்துள்ளதாகவும் ராம்குமார் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் வக்கீல் முற்றிலும் நேர்மாறான தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரண்ட் லிஸ்ட்டிலேயே இல்லை!
ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் போய் பார்த்தால் அவரது நண்பர்கள் பட்டியலில் சுவாதியின் பெயர் இல்லை, சுவாதி குறித்த எந்த குறிப்பையும் எந்த போஸ்ட்டிலும் காண முடியவில்லை.

எங்கே அந்த சூரிய பிரகாஷ்?
மேலும் சூரிய பிரகாஷ் என்பவர் மூலமாகத்தான் சுவாதி அறிமுகமானதாக ராம்குமார் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த சூரிய பிரகாஷ் பெயரையும் நண்பர்கள் பட்டியலில் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications