For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதபுரம் தொகுதியில் சீட் கேட்ட கலாம் பேரன்: மறுத்துவிட்ட பாஜக

By Chakra
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலிம் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. இதனால் பாஜக தொண்டர்கள் மத்தியிலேயே அதிருப்தி நிலவுகிறது.

அப்துல் கலாமின் அண்ணனின் பேரன் ஷேக் சலிம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட ஷேக் சலிம் விருப்ப மனு அளித்தார். ஆனால், இந்தத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக துரை கண்ணனின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Ramnad: Kalam's grandson denied assembly seat in BJP

இதனால் பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி பதவிகளிலும், பல்வேறு அமைப்புகளிலும் பெருவாரியாக முஸ்லீம்கள் பதவி வகிக்கின்றனர்.

இந்தத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட குப்புராம் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 51,479 வாக்குகள் பெற்றிருந்தார். சட்டசபைத் தேர்தலில் ஷேக் சலீமை நிறுத்தியிருந்தால் பாஜகவுக்கு சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையும் வாக்குகளும் கிடைத்திருக்கும் என்கின்றனர் இந்தத் தொகுதி பாஜக தொண்டர்கள்.

English summary
BJP has denied ticket for former President Abdul Kalam's grandson in the assembly elections for Ramnad constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X