"என் மகன் வேண்டாம்".. ராணிப்பேட்டை தொகுதியில் சீட் கேட்கும் அமைச்சர் காந்தி.. திமுக வேட்பாளர் மாற்றம்?
சென்னை: ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அமைச்சர் ஆர். காந்திக்கு இந்த முறை திமுக வாய்ப்பு வழங்கவில்லை. காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக போட்டியிட சான்ஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், தான் தனது மகனுக்கு சீட் வேண்டாம். மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளனர். வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் ராணிப்பேட்டை தொகுதியில் மட்டும் திமுகவில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராணிப்பேட்டை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக அமைச்சர் ஆர் காந்தி உள்ளார்.
அமைச்சருக்கு பதில் மகனுக்கு சீட்
அமைச்சர் ஆர் காந்திக்கு வயது 80 ஆகிறது. இருப்பினும் கூட அமைச்சர் காந்தி மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் சீட் கேட்டுள்ளார். ஆனால் அவரது வயதை காரணம் காட்டி திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் காந்திக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
திமுக தலைமைக்கு கோரிக்கை
அதுமட்டுமின்றி தனது மகன் வினோத் காந்திக்கு பதில் தனக்கே மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதுதொடர்பாக திமுக தலைமைக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விஷயத்தில் தற்பாது வரை திமுக தலைமை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
வேட்பு மனுவில் தாமதம்
மேலும் தற்போது திமுக தலைமை குழப்பத்தில் உள்ளது. மீண்டும் அமைச்சர் காந்திக்கு சீட் வழங்குவதா? இல்லாவிட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவரது மகன் வினோத் காந்தியையே களமிறக்குவதா? என்று திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் வினோத் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
தேர்தல் பணி இல்லையாம்
மேலும் தனக்கு சீட் வழங்கினால் மட்டுமே தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்று அமைச்சர் காந்தி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொகுதி நிலவரம்
இந்த ராணிப்பேட்டை சட்டசபை அமைச்சர் காந்தியின் கோட்டையாக உள்ளது. இங்கு அவர் மொத்தம் 4 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதேவேளையில் 2011, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடைந்தார். கடந்த 2021 தேர்தலில் காந்தி திமுக சார்பில் களமிறங்கினார். அவர் மொத்தம் 1,03,291 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் எஸ்எம் சுகுமார் 86,793 ஓட்டுகள் வாங்கினார். இதனால் காந்தி 16,498 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக 2016 தேர்தலில் காந்தி 81,724 ஓட்டுகள் பெற்றதோடு, அதிமுக வேட்பாளர் எழுமலை 73,828 ஓட்டுகள் வாங்கினார். இதனால் ஆர் காந்தி 7,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 2026 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி வேட்பாளராக அறுிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இந்த தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக விஎம் கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தாரிகா சல்மான், தவெக சார்பில் தாஹீரா உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications