ராணிப்பேட்டையில் ஆச்சரியம்.. கலெக்டர் ஆபீசுக்கே வந்துட்டாங்க.. யார் பாருங்க? இப்படி கிளம்பிட்டாங்களே
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த குடிமகன்களை பார்த்து பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.. என்ன நடந்தது?
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆங்காங்கே பொதுமக்கள் மனுக்கள் அளித்து வரும் நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கோரி, பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு, தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒருமுறை மனு தந்திருந்தது, பரபரப்பாக பேசப்பட்டது.

தென்காசி மாவட்டம்: சில நாட்களுக்குமுன்புகூட தென்காசி வீரகேரளம்புதூர் அருகே பறங்குன்றாபுரம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைக்கு மது பிரியர் ஒருவர் பீர் வாங்க போனார்.. அங்கே அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் ரூபாய் 10 அதிகம் கேட்டார்களாம்.
இதைப்பற்றி டாஸ்மாக் ஊழியரிடம் கேட்டதற்கு, "கடைக்கு கரண்ட் பில் எல்லாம் கட்ட வேண்டியிருக்கு, 10 ரூபாய் அதிகமாக தரவேண்டும்" என்றார்களாம். உடனே இந்த மதுப்பிரியர், தமிழக அரசுக்காக வீடியோவை பதிவிட்டிருந்தார்.
வீடியோ: "அரசாங்கத்துக்கு சின்ன வேண்டுகோளுங்க.. இப்பவெல்லாம் ரம்மே கிடைக்க மாட்டுங்குது.. ஆலங்குளத்துல இருக்குற எந்த ஒயின்ஷாப்புலேயும் ரம் கிடைக்கறதில்லை.. பிராந்தி தான் வெச்சிருக்காங்க.. இந்த பிராந்தியை வாங்கி குடிச்சாலும், ரம்மு அடிச்ச மாதிரி இருக்கிறதுல்லலே.. நாங்க உடம்பு வலியாய், வேலை பாத்துட்டு போனால், ரம்மு இல்லைன்னு ஒத்த வார்த்தையில சொல்லிடுறாங்க.. நாங்க என்ன பண்ணட்டும்?
அரசாங்கம் எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கய்யா.. ஆலங்குளத்துல ரம்மை கொஞ்சம் அதிகமா இறக்கி விடுங்க.. நாங்க இங்கே எல்லாரும் ரம்முதான் குடிப்போம். முழுநேரமாக குடிச்சிட்டு விழுந்து கிடக்குறவன்தான், பிராந்தியை குடிப்பான். உடம்பு வலிக்க உழைக்கிறவங்க நாங்களெல்லாம் எங்கே போறது? எங்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணிட்டு போங்கய்யா" என்று அழாத குறையாக கோரிக்கை வைத்திருந்தார்.
ராணிப்பேட்டை: இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ஒரு கோரிக்கை கிளம்பி உள்ளது. கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது... ஆனால், திடீரென இந்த கடை மூடப்பட்டது.
இதனால் அந்த பகுதி குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.- இந்த ஊரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இன்னொரு டாஸ்மாக் கடைக்கு சென்று வருகிறார்கள். இதனால், டூவீலர்களுக்கு பெட்ரோல் நிறைய போட வேண்டியிருக்கிறதாம்.. காசு செலவாகிறதாம்.
கள்ள சந்தை: இதன்காரணமாக, இந்த கிராமத்தில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது வாங்கும் நிலைக்கு குடிமகன்கள் தள்ளப்பட்டு விட்டார்களாம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட குடிமகன்கள் முடிவு செய்தனர்.. அதனால், மது பிரியர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு போனார்கள்.
"எங்கள் கிராமத்தில் ஒரே ஒரு மதுபான கடை இருந்தது.. இப்போது அதுவும் இல்லை. நாள் முழுவதும் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.. இங்கே அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும்.. அரசு நிர்ணயத்த விலையில் எங்களுக்கு மதுபானம் கிடைக்கும். அதனால், எங்கள் பகுதிக்கு அரசு மதுபான கடை அமைத்து தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதை ஒரு மனுவாகவும் கலெக்டரிடம் தந்துள்ளார்கள்.
அதிரடிகள்: டாஸ்மாக்கை இழுத்து மூட சொல்லியும், மதுவிலக்கை அமல்படுத்த சொல்லியும், எதிரான போராட்டங்களை தமிழக அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், அந்த தமிழக அரசிடமே, இப்படியான கோரிக்கைகளை வைத்திருப்பது வியப்பை தந்து வருகிறது.. அப்படின்னா நம்ம தமிழ்நாட்டில் மதுவிலக்கு???
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications