ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் குழந்தையை மீட்டுள்ளனர் தனிப்படை போலீசார். கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் தவெக ஆதரவாளர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் தொழிலை செய்து வரும் சேகர் பிரேமா தம்பதியினர் தங்களது ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இரவு மாணிக்க நகர் அருகேயுள்ள சாலையோரமாக உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

Ranipet

மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, அருகிலிருந்த குழந்தை காணாமல் போனது தெரியவந்தது மேலும் இதுகுறித்து தாய் பிரேமா அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தை காணாமல் போன பகுதி மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்..

Ranipet

இதில் அக்ராவரம் பகுதியை சேர்ந்த கௌசல்யாவின் தோழியான ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்த மல்லீஸ்வரி தனக்கு குழந்தை வேண்டுமென கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கௌசல்யா தனது கணவர் பூபதியிடம் தெரிவித்த நிலையில், பூபதி தனது நண்பர் கார் ஓட்டுநருமான சந்தோஷிடம் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து சந்தோஷ், பூபதி, குமரன் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு வயது மகேஸ்வரி குழந்தையை கடத்தி சென்று ரேணிகுண்டாவில் இருந்த மல்லீஸ்வரியிடம் ஒப்படைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதிக்கு சென்ற சிறப்பு தனிப்படை போலீசார் மல்லீஸ்வரியைக் (44) என்பவரை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர் இச்சம்பவத்தில் தொடர்புடைய கௌசல்யா (35), பூபதி(42) சந்தோஷ் (35), குமரன் (30)ஆகியோரையும் கைது செய்தனர் மேலும் குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ், தவெக ஆதரவாளர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தவெக நிர்வாகி ஒருவருக்கு ஓட்டுனராக சந்தோஷ் பணியாற்றி வந்ததும் பணத்துக்காக குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+