For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வந்தல்லோ வந்தல்லோ... இங்கிலீஷ் பேச ஆச வந்தல்லோ.. சசிக்கு ஒரு ரெபிடெக்ஸ் புக் பார்சல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஜெயலலிதாவைப் போல் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச ஆசை வந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆங்கிலம் கற்க ஆசை வந்துள்ளது. அவருக்கு ரெபிடெக்ஸ் புக் மற்றும் 30 நாட்களில் ஆங்கிலம் ஆகிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

ஜெ மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக் கொண்ட சசிகலா கொண்டை, காலர் வச்ச ஜாக்கெட், அய்யங்கார் நாமம், மேக்கப் என அடுத்த ஜெயலலிதாவாகவே தன்னைக் காட்டிக்கொண்டார்.

ஆனால் சொந்தமாக பேசத் தெரியாத அவர் எழுதி வைத்துதான் படித்து வந்தார். இதனால் கேலிக்குள்ளான சசிகலா, நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஆங்கில கேள்விக்கு தமிழில் பதில்

ஆங்கில கேள்விக்கு தமிழில் பதில்

ஆனாலும் ஜெயலலிதவைப் போன்ற ஆங்கில புலமை இல்லாததால் பல இடங்களிலும் தமிழிலேயே பேசி வந்தார். இந்தியா டுடே நடத்திய பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட போதுகூட ஆங்கில கேள்விக்கு தமிழில் பதிலளித்தார்.

இங்கிலிஷ் பேச ஆசை

இங்கிலிஷ் பேச ஆசை

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் சிறையில் கழிக்க உள்ள சசிகலா ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக ஆங்கில ஆசிரியரையும் நியமித்து தரவேண்டும் என அவர் சிறை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரெபிடெக்ஸ் உதவியாக இருக்கும்

ரெபிடெக்ஸ் உதவியாக இருக்கும்

இதனால் அவருக்கு விரைவில் ஆங்கிய ஆசிரியரை சிறை நிர்வாகம் நியமிக்கும் எனத் தெரிகிறது. ஆங்கிலம் கற்க ஆசைப்படும் சசிகலா எளிமையாக ஆங்கிலம் கற்க என விற்கப்படும் ரெபிடெக்ஸ் புக்கை படிக்கத்தொடங்கலாம்.

30 நாட்களில் ஆங்கிலம்

30 நாட்களில் ஆங்கிலம்

அதேபோல் 30 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி என்ற புத்தகத்தையும் அவர் படிக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த புத்தகங்களை வாங்கும்போது புரனவுன்சியேஷன், அர்த்தம் ஆகியவை தமிழில் இருப்பதாக பார்த்து வாங்கினால் கூடுதல் உதவியாக இருக்கும்.

பொளந்துக்கட்டுவார் சசி

பொளந்துக்கட்டுவார் சசி

சசிகலா தினசரி ஆங்கில நாளேடுகளை படித்தாலும் அவரது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாமாம். எது எப்படியோ நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது சசிகலா ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் புலமை பெற்று பொளந்துக்கட்டுவார் எனத் தெரிகிறது.

English summary
Sasikala wants to learn english in the Bengaluru Jail. Rabidex and speak english in 30 days will be helpful for her it seems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X