ரேசன் கடை பொருட்களால் உருவானதுதான் அம்மா உணவகம் - கனிமொழி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: ரேசன் கடையில பொருட்கள் சரியாக கிடைப்பது இல்லை. காரணம். அங்குள்ள பொருட்கள் அம்மா உணவகத்திற்கு செல்வது தான் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.

தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து கனிமொழி எம்பி தென்காசியி பிரசாரம் செய்து பேசினார்.

கனிமொழியின் பேச்சிலிருந்து....

எப்படிப்பட்ட ஆட்சி

எப்படிப்பட்ட ஆட்சி

தமிழகத்தில் நடந்து வரு்ம் ஆட்சி எப்படிப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். அதன் அவலத்தை அனைவரும் அனுபவித்து வருகின்றனர்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை. தென்காசியில் ஒரு நலத்திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.5 கோடியில் சிடி ஸ்கேன், மேம்பாலம், ரத வீதிகள் சீரமைப்பு, ஆசாத் நகர் பாலம், ஐந்தருவியில் சுற்று சூழல் பூங்கா, மின் வாரியகோட்ட பொறியாளர் அலுவலகம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், தாலுகா அலுவலக கட்டிடம், நகராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டன. அதில் ஓன்றேனும் அதிமுக ஆட்சியில் நடந்தது உண்டா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிருஷ்ணசாமி வெற்றி பெற்றால்

கிருஷ்ணசாமி வெற்றி பெற்றால்

தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றால் தொழிற்சாலைகள், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பெற்று தர முன்வருவார். சட்டமன்ற உறுப்பினரை டிவியில் வேண்டுமானால் பார்த்து கொள்ளலாம். ஒரு நபருக்கு 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1 லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கின்றனர்.

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை

ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பது இல்லை. காரணம் ரேசன் பொருட்கள் எல்லாம் அம்மா உணவகத்திற்கு செல்வது தான். இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மோடிக்கும், ஜெ.வுக்கும் வித்தியாசம் இல்லை

மோடிக்கும், ஜெ.வுக்கும் வித்தியாசம் இல்லை

மோடி கருத்துக்கும், ஜெயலலிதா கருத்துக்கும் வித்தியாசம் இல்லை. இஸ்லாமியர்களுக்கு இட ஓதுக்கீடு தரமாட்டேன் என்று கூறியவர் ஜெயலலிதா.

சந்தர்ப்பவாத கூட்டணி

சந்தர்ப்பவாத கூட்டணி

பாஜக கூட்டணி சந்தர்ப்பாவாத கூட்டணி. ராமர் கோவில் பிரச்சனை, பொது சிவில் சட்டம், சேது சமுத்திர திட்டம், ஆகியவற்றில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. தேர்தலுக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் புதிதாக வேடம் போடுபவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் கனிமொழி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+