6 மாதம் கெட்டுப்போகாத 8 வகையான உணவுகள்... ரயில் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி அறிமுகம்
சென்னை: நீண்ட தூரம் ரயில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளின் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையில் 8 வகையான உணவுப் பொருட்களை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. உயர் அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட தூரம் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கருத்தில் கொண்டு, இரவு நேரங்களில் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்டுகிறது.

இதில் லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த உணவு வகைகள் குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாது.
பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த 8 வகையான உணவு வகைகளும் அடுத்த 2 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. விரைவில் இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்' என்று பெயர் வைத்து இருக்கிறோம் என்று கூறினர்.
இது தொடர்பாக சென்னை கோட்ட மேலாளர் அனுபாம் சர்மா டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐஆர்சிடிசி 'ரெடி டூ ஈட்' திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி சலுகை விலையில் உணவு வகைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications