கூட்டணி பேரத்துக்காக விஜயகாந்த் டெல்லி பயணம்: மைக்கேல் ராயப்பன் சாடல்
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி பேரத்துக்காகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்றிருப்பதாக அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் சாடியுள்ளார்.
விஜயகாந்தின் டெல்லி பயணம் தொடர்பாக மைக்கேல் ராயப்பன் கூறியதாவது:
தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனை குறித்து பிரமரிடம் கூறுவதற்காக டெல்லி சென்றதாக விஜயகாந்த் கூறி இருகிறார். பிரதமரை சந்தித்தால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து விடுவார் என்று நினைக்கும் பாஜகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசலாம்.

மற்ற கட்சிகளையும் பேரம் பேசவைக்கலாம் என்பது தான் விஜயகாந்த் திட்டம். அதற்காகத் தான் எம்.எல்.ஏக்களுடன் டெல்லி செல்லும் நாடகத்தை விஜயகாந்த் நடத்தியுள்ளார்.
அவருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திய அவர் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் 3 கட்சிகளில் ஊழல் இல்லாத கட்சி எதுவும் உண்டா?
அந்த கட்சியில் இருப்பவர்கள் விரைவில் அவரைப்பற்றி புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.












Click it and Unblock the Notifications