மோகனாம்பாள் கூட்டாளி வீட்டில் 17 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கல்- கார் பறிமுதல்!

காட்பாடி தாராபடவேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் (வயது 55) என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மோகனாம்பாளிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தனது அக்கா நிர்மலாவின் மகன் சரவணனுக்கு செம்மரக் கடத்தலில் ஏராளமான பணம் கிடைத்தது. அந்த பணத்தில் வட்டி தொழிலில் ஈடுபட்டேன். செம்மரக் கடத்தல் சம்பவத்தில் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பாபு முக்கிய புள்ளி என தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, கைதாகி இருந்த பாபுவை காட்பாடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
செம்மரக் கடத்தல் தொடர்பாக பாபு கூறிய தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:
22 ஆண்டுகளாக மரம் கடத்தல்
கடந்த 1992-ம் ஆண்டு முதல் சந்தனமரக் கடத்தலில் பாபு ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஒடுகத்தூர் வனத்துறையால் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா காடுகளில்
ஜமனாமரத்தூர் வனப்பகுதியில் சந்தனமரம் முழுவதும் காலியானதால் செம்மரம் வெட்டும் தொழிலை ஆரம்பித்துள்ளார். இதில் ஏராளமான பணம் கிடைத்ததால் ஜவ்வாதுமலை கிராமங்களில் இருந்து இளைஞர்களை திரட்டி ஆந்திர மாநிலத்திற்கு செம்மரங்கள் வெட்ட அனுப்பியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணம்
செம்மரக் கடத்தலில் கோடிகளில் பணம் புரண்டதால் அணைக்கட்டு பகுதியில் இருந்து தனது இருப்பிடத்தை காட்பாடிக்கு மாற்றிக்கொண்டார். அங்கு ரூ.1 கோடி மதிப்பில் பங்களா கட்டினார். மேலும், ஊருக்கு வந்து சென்றால் தங்குவதற்கு வசதியாக அங்கும் ரூ.30 லட்சத்தில் சகல வசதிகளுடன் வீடு கட்டினார்.
சரவணனுடன் கூட்டு
தொழில் கூட்டாளியான போண்டா வெங்கடேசனுக்கு மோகனாம்பாளின் அக்கா மகன் சரவணனின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போண்டா வெங்கடேசனின் மொத்த தொழிலையும் சரவணன் கவனித்துக் கொண்டார். இதனால், பாபுவுடனும் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சரவணன் செம்மரக் கடத்தல் தொழிலில் தனியாக ஈடுபட்டுள்ளார்.
செம்மரங்கள் பதுக்கல்
மேலும், அணைக்கட்டு அடுத்த கீழ்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 30) என்பவர் மூலம் செம்மரக் கடத்தலை பாபு செய்து வந்துள்ளார். ஓட்டேரி குடோன் தெருவில் ரூ.1 கோடி மதிப்பில் வீடு ஒன்றை கட்டிவருவதாகவும் அங்கு செம்மரங்கள் பதுக்குவது வழக்கம் என்றும் கூறினார்.
கார், செம்மரக்கட்டை பறிமுதல்
இதையடுத்து அந்த வீட்டில் டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சாக்கு மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான 17 கிலோ செம்மரக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மீண்டும் சிறையில்...
போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று மீண்டும் காட்பாடி நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் பாபு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சரவணனுக்கு கஸ்டடி
இந்த வழக்கில் சரணடைந்த சரவணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக வருகிற 23-ந் தேதி காட்பாடி நீதிமன்றத்தில் சரவணன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்
அப்போது சரவணனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications