நடிகர் சங்க தேர்தல்: வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கான கட்டுப்பாடுகளை தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் வளியிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:
- ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை.
- வாக்காளர்களும், வேட்பாளர்களும் அடையாள அட்டையுடன் வரவேண்டும், அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- தேர்தலில் 60 பேர் போட்டியிடுவதால், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
- வெளியூர்களில் இருந்து ஓட்டுப்போட வருபவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும். அடையாள அட்டைகளை காண்பித்து அவர்கள் வாக்களிக்கலாம்.
- ஓட்டுப்பதிவு 18-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மாலை 5 மணிக்கு மேல் ஓட்டுப்போட அனுமதி இல்லை.
- வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில், செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
- வாக்குப் பெட்டிகள் ஓட்டுப்பதிவுக்கு முன் ஏஜெண்டுகளிடம் திறந்து காண்பிக்கப்பட்டு பின்னர் ‘சீல்' வைக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் தபால் ஓட்டுப்பெட்டி திறந்து எண்ணப்படும். அதன் பிறகு வாக்குச்சாவடியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.
- வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
- வாக்குகள் எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். திரையிலும் அவை காண்பிக்கப்படும்.
- ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications