காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாரா? கை, கால் துண்டானது எப்படி? - ரேகா சிந்துவின் பெற்றோர் சந்தேகம்
எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது மரணத்தில் மர்மம் உள்ளது என்று நடிகை ரேகா சிந்துவின் பெற்றோர் புகார் கூறியுள்ளார்.
வேலூர்: எனது மகள் வந்த கார் பாதுகாப்பு நிறைந்தது. விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காக்கும். அதுபோல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நடிகை ரேகா சிந்துவின் பெற்றோர் புகார் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார்.

கார் விபத்து
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் சிந்து உள்பட 6 பேர் இருந்துள்ளனர். காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை ரேகா சிந்து மரணம்
விபத்தில் பலியான நடிகை ரேகா சிந்து உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது தந்தை நேரில் வந்து ரேகா சிந்து உடலை பார்த்து கதறி அழுதார்.

கை கால் துண்டானது ஏன்?
ரேகா சிந்துவின் ஒரு கை, கால் துண்டாகி இருந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்டார். எனது மகள் வந்த காரில் பாதுகாப்பு வசதிகள் உள்ளது. விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காக்கும். அதுபோல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

மரணத்தில் சந்தேகம்
எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் கதவு தானாக திறந்து வெளியே வந்து விழுந்தாரா? என்றும் கேட்டுள்ளார்.
விபத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தாலும், அவருடன் வந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பி உள்ளனர். எனது மகள் சாவில் பலத்த சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்வேன் என தெரிவித்தார்

அநாதையாக போட்டது ஏன்?
விபத்து பற்றி எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காரில் சென்றவர்களில் என் மகள் மட்டுமே இறந்து போனதாக கூறுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ரேகாவின் தாயார் கூறியுள்ளார். என் மகள் உடலை எங்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் திருட்டுத்தனமாக மருத்துவமனையில் போட்டு விட்டு ஓடிவிட்டார்களே? அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எனது மகளின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என்றும் ரேகாவின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications