ஆந்திர என்கவுண்டரில் பலியான 2 பேரின் உடல்களோடு உறவினர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை: ஆந்திர என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரண்டு பேரின் உடல்களோடு அவர்களது உறவினர்கள் திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர வனப்பகுதியில் நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 20 பேரில் 7 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூடு தகவலறிந்து பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று திருவண்ணாமலையில் சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலைய முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
பின்னர், ஆந்திரா புறப்பட்டுச் சென்ற பலியானவர்களின் உறவினர்கள், பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்களை வாங்க மறுத்தனர். இது திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும் வரை உடல்களைப் பெற மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அதிகாரிகளின் வற்புறுத்தலால் என்கவுண்டரில் பலியானவர்களின் உடல்களைப் பெற்றுக் கொண்டு உறவினர்கள் தமிழகம் திரும்பினர்.
பலியான இரண்டு பேரின் உடல்களோடு திருவண்ணாமலை வந்து சேர்ந்த உறவினர்கள், படவேடு அருகில் வேட்டகிரிபாளையத்தில் கிராம மக்களோடு சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுத்த நிறுத்த போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 தமிழர்களின் உயிரைக் குடித்த ஆந்திர என்கவுண்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications