காலதாமதமாக புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமத்திற்கு கட்டணம் கிடையாது.. புதுச்சேரி அரசு அறிவிப்பு
காலதாமதமாக புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழுக்கு கட்டணம் கிடையாது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: காலதாமதமாக புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழுக்கு கட்டணம் கிடையாது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமத்தை கால தாமதமாக புதுப்பிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது காலதாமதமாக புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
மேலும் அவர்கள் தங்கள் அறிவிப்பில் முதல் முறை ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போது மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications