நிலத்தகராறில் நிருபருக்கு கத்திக்குத்து: தலைமறைவான மூவருக்கு வலைவீச்சு
நெல்லை: திருநெல்வேலி அருகே நிலத்தகராறில் நிருபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற மூன்றுபேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம், அரியப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் சென்னையில் குமுதம் ரிப்போர்ட்டர் வாரஇதழில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம், நெல்லை மாவட்டம் கடையம் அருகே எல்லைப்புளியில் உள்ளது. அதில் நெல் பயிரிட்டுள்ளார்.

இவரது நிலத்திற்கு பக்கத்து நிலத்தில் பயிர் செய்துவரும் மகாலிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் பாஸ்கரன், சங்கரன் ஆகியோருக்கும் செல்வராஜூக்கும் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று செல்வராஜ், விவசாய நிலத்திற்கு சென்றிருந்போது அங்கு வந்த மூவரும், முன்விரோதத்தில், அவரை தாக்கி வலதுகையில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த செல்வராஜ் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், கடையம் போலீசார், சங்கரன் உள்ளிட்ட மூவர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாவூர் சத்திரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications