குடியரசு தினவிழா - தன்வந்திரி பீடத்தில் பாரதமாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஹோமம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று தன்வந்திரி பீடத்தில் பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஹோமங்கள் நடைபெற உள்ளன.
வேலூர்: வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாரதமாதாவிற்கு அபிஷேகத்துடன் சிறப்பு ஹோமங்களும் நடைபெற உள்ளன. தேசியக்கொடி ஏற்றப்பட்டு நலதிட்ட உதவிகளும் வழங்கப்படும்.
இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்த விதமான பேதமும் இல்லாமல் சமத்துவம் நிறைந்த ஒரு பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.
ஜாதி, மத பேதம் பார்க்காமல் சகல மதத்தவர்களும் ஆரோக்யம் வேண்டி இங்கு வந்து பிணி தீர்க்கும் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவானைத் தரிசித்துத் தங்களது பிரார்த்தனைகளை அவர் முன் வைக்கிறார்கள். அது மட்டுமல்ல. அவர்களது பிரார்த்தனைகள் பலித்து அதற்குண்டான பலனையும் பெற்று சிறப்பாக இருப்பதாக ஸ்வாமிகளிடம் தெரிவித்து வருகிறார்கள்.

தன்வந்திரி பீடம்
பக்தர்களின் பிரார்த்தனைகள் பலிக்கவும், அவர்களது பிணிகள் அகலவும் மட்டுமல்ல... இந்த உலகத்தில் எந்த ஒரு வேண்டுகோளை முன்வைத்து எழுகின்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறவர் இந்த ஸ்ரீதன்வந்திரி பகவான்! சரிந்து போன இந்திய தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் சீராகி, மேலும் சிறந்து விளங்குவதற்கென்று ஒரு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

பாரதமாதா
தன்வந்திரி பகவான் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சதா சர்வ காலமும் தேக நலனுக்காகவும் தேச நலனுக்காகவும் பல்வேறு விதமான நற்செயல்களை செய்து வருகிறார். தேக ஆரோக்யத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பகவானை ஸ்தாபிதம் செய்தது மட்டுமல்லாமல் தேச நலனுக்காக பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளை பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நம் நாட்டின் பூமித் தாயாக விளங்கி வருகின்ற ஸ்ரீ பாரத மாதாவை ஆரோக்ய பீடத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் முதலில் போற்றி வழிபடும் விதத்தில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேசியக்கொடி ஏற்றி நாட்டின் நலனுக்காக சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் செய்து வருகிறார். இன்னாட்களில் மருத்துவ சேவை, கல்வி சேவை, ஏழை எளியவற்கு உதவிகள், மாற்றுதிறானாளிகளுக்கு உதவி போன்ற பல்வேறு விதமான நலதிட்டங்கள் நடைபெறுகிறது.

குடியரசு தினம்
இந்தாண்டும் வருகிற 26.01.2018 வெள்ளிக் கிழமை காலை ஸ்ரீ பாரதமாதாவிற்கு அபிஷேகத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் சிறப்பு ஹோமங்களும் நலதிட்ட உதவிகளும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications