காரைக்குடி பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழா

காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் சிறப்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் நாச்சியப்பன் அவர்கள் தலைமை வகித்தார். இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி இன்டராக்ட் சங்கமம் தலைவர் செல்வன் ஆரோக்கிய கிறிஸ்டோபர் அனைவரையும் வரவேற்றார்.

காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் பயிற்றுனர் முத்துக்குமார் மற்றும் சிவக்குமார் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

 நாட்டுப்பற்றின் அவசியம்

நாட்டுப்பற்றின் அவசியம்

இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி முன்னால் மாணவரும் இந்திய இராணுவ வீரருமான முனியசாமி , பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் சகாய செல்வன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகுசுந்தரி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் நாச்சியப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு நாட்டுப்பற்றின் அவசியத்தை எடுத்து கூறினார்.

 மாணவர்களுக்கான நற்பண்புகள்

மாணவர்களுக்கான நற்பண்புகள்

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தனது சிறப்புரையில், பிறருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்த்தல், சமாதானத்தை கடைபிடித்தல், சுயநலமின்றி வாழ்தல்,அமைதியை கடைபிடித்தல் போன்ற நற்பண்புகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி முன்னால் மாணவரும் இந்திய இராணுவ வீரருமான முனியசாமி, மாணவர்கள் பிற்காலத்தில் நாட்டின் பாதுகாப்பு துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள்

விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள்

ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகிலன் விடுதலைப்போரட்ட வீரர்கள், அவர்கள் நாட்டுக்கு செய்த தியாகங்கள் பற்றி பேசினார். எட்டாம் வகுப்பு மாணவி விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களைப் போற்றி கவிதை படித்தார். ஏழாம் வகுப்பு மாணவி தர்ஷினி பார்புகழ் பாரத நாடு எனும் தொடங்கும் பாடல் மூலம், பாரத நாட்டின் அழகை வர்ணித்து பாட்டு பாடினார். ஆசிரியர் ஜெயராஜ் நாட்டு பற்று உணர்வு சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்று கூறி வீரவுரை ஆற்றினார்.

 பல்வேறு வகையான போட்டிகள்

பல்வேறு வகையான போட்டிகள்

குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இவ்விழாவையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிறைவில் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+