குடியரசு தினம்.. விவிஐபி பாஸ் வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசு... திகுதிகு மன்னார்குடி கோஷ்டி
குடியரசு தினத்தில் கெத்து காட்ட நினைக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி. ஆனால் இதுவரை விவிஐபி பாஸ்கள் அனுப்பி வைக்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம் போயஸ் கார்டன்.
சென்னை: குடியரசு தின நாள் கொண்டாட்டங்களில் தாங்கள்தான் விவிஐபி என நிரூபிக்க மன்னார்குடி கோஷ்டி படாதபாடு பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிக்னல் கொடுக்காததால் போயஸ் கார்டனுக்கு இன்னமும் விவிஐபி பாஸ்கள் போகவில்லை என்பதால் மன்னார்குடி கோஷ்டி கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் தங்களுடைய ஆட்சிதான் என கெத்து காட்டி வருகிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக் கட்டை போட்டிருக்கிறது.

இதனால் அதிமுகவை கைப்பற்ற முடிந்த சசிகலாவால் முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் தமிழகத்தில் ஆட்சியை கபளீகரம் செய்துவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி தொடர்ந்து மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாளைய குடியரசு தினத்தன்று தமிழக அரசை தாங்கள்தான் ஆட்டிப் படைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விவிஐபிகளாக கலந்து கொள்ள மன்னார்குடி கோஷ்டி பகீர பிரயத்தனம் காட்டி வருகிறது. ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ இன்னமும் அதிகாரிகளுக்கு சிக்னல் தராததால் போயஸ் கார்டனுக்கு விவிஐபி பாஸ்கள் போகவில்லையாம்.
இதில் மன்னார்குடி கோஷ்டி கடும் அதிருப்தி அடைந்திருக்கிறதாம். மத்திய அரசின் ஆதரவின் தாம் ஆட்சியை நடத்திவிடலாம் என தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுகிறாரே என்ற கொந்தளிப்புடன் இருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications