புளியங்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு- போலீஸ் நிலையம் முற்றுகை
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
புளியங்குடியில் சிந்தாமணி, டிஎன் புதுக்குடியில் மூன்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 1வது வார்டில் முருகன் கோவில் அருகே புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுற்றுப்புறப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து புதுக்கடை மூடப்பட்டது. பின்னர் புளியங்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீ்ண்டும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கூறி புகார் மனு கொடுத்தனர்.
இதனால் கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசித்து வருவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications