ஜெயலலிதா சிகிச்சைக்காக லண்டனிலிருந்து பறந்து வந்த ரிச்சர்ட்! இவருக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனின் செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வரும் ரிச்சர்ட் பியெல்தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

ரிச்சர்ட் சிகிச்சையளித்ததை முதலில் மீடியாக்கள் வெளிப்படுத்தின. அதன்பிறகு அப்பல்லோ தனது அறிக்கையிலும், ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருவதை உறுதி செய்தது.

Richard Beale who is treating Tamilnadu CM Jayalalithaa

நுரையீரல் பாதிப்பு, செப்சிஸ் அல்லது செப்டிசீமியா எனப்படும் பாக்டீரியா தொற்று ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு காரணமான அளிக்கப்படும் செயற்கை சுவாசம், ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புக்கள் செயல் இழந்தவர்களுக்கான சிகிச்சையில் ரிச்சர்ஸ் புகழ்பெற்றவர்.

ஜெயலலிதாவுக்கு ரிச்சர்ட் என்ன மாதிரியான சிகிச்சையளிக்கிறார் என்பதை அப்பல்லோ மருத்துவமனை வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், உலகின் தலை சிறந்த அவசர கால சிகிச்சை நிபுணர்களில் ரிச்சர்ட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட் குறித்த ஒரு பார்வை:

  • லண்டன் பல்கலைக்கழகத்தின், புனித பர்த்தலமேயு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தவர் (1984).
  • ராயல் கல்லூரியில் மயக்கவியல் மருத்துவ பயிற்சி முடித்தவர் (1990).
  • ஐ.சி.யூ போன்ற அவசர சிகிச்சை பிரிவு சிகிச்சைக்காக சிறப்பு பயிற்சி முடித்தவர். இப்படிப்பை 2011ல் முடித்துள்ளார்.
  • தீவிர செப்சிஸ், இதயம்-செயற்கை சுவாசம், ஆகிய பிரிவுகளில் இவர் ஸ்பெஷலிஸ்ட்.
  • செப்சிஸ், ஏஆர்டிஎஸ், ஹீமோடைனமிக்ஸ், அவசர சிகிச்சை பிரிவு நியூட்ரிஷியன், ஐ.சி.யூ இன்ஃபோர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொண்டவர்.
  • தற்போது, லண்டனின் புகழ்பெற்ற செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார் ரிச்சர்ட் பியெல்.
  • நுரையீரல், சிறுநீரகப் பாதை, செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகள், ரத்தத்தில் கலந்து நஞ்சை வெளியிடும். உடல் முழுவதும் பயணிக்கும் இந்த ரத்தம், உடல் உறுப்புகளைப் பாதித்து ரத்த அழுத்தத்தைக் குறைத்து உறுப்பு செயல்பாட்டை மட்டுப்படுத்தும். இதுதான் செப்சிஸ். இதன் தொடக்க அறிகுறி கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+