விசிகவிற்கு மோதிரம் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசிக தேர்தல் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த பிறகு முதல்முறையாக 2004 லோக்சபா தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் #மோதிரம் சின்னம் ஒதுக்கியது #VCK pic.twitter.com/RBxnLFuThW
— Oneindia Tamil (@thatsTamil) March 24, 2016
2011 சட்டசபைத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் போட்டியிட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. இந்நிலையில், இந்த சட்டசபைத் தேர்தலிலும் விசிகவுக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது நட்சத்திரம் சின்னம் கேட்டார் திருமாவளவன் அது கிடைக்கவில்லை. உடனே திருமாவளவன், தனது தாயார் பெரியம்மாளிடம் கொடுத்து வேறு சின்னம் ஏதாவது தேர்வு செய்யுமாறு கூறினார். மோதிரம் எளிமையான சின்னமாக உள்ளது. இதனை தேர்வு செய் என்று அவரது தாயார் கூறினார்.
உடனே திருமாவளவன், தனது தாயார் தேர்வு செய்த மோதிரம் சின்னம் கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார். அதுவே கிடைத்தது. இம்முறையும் மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திருமாவளவன் மகிழ்ச்சியைடைந்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications