அதற்குள் சென்றுவிட்டீர்களே ஆர்த்தி அகர்வால்: குஷ்பு, சமந்தா, நானி வருத்தம்
சென்னை: மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை ஆர்த்தி அகர்வாலின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறி பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஆர்த்தி அகர்வால் தனது 16வது வயதில் பாகல்பன் என்ற இந்தி படம் மூலம் நடிகை ஆனார். அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கினார். துவக்கத்தில் வரிசையாக ஹிட் கொடுத்தவர் பின்பு காணாமல் போய்விட்டார்.
தமிழில் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். 31 வயதில் இறந்த ஆர்த்தியின் மரண செய்தி திரை உலக பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரபலங்கள் வெளியிட்ட சில ட்வீட்கள்,
|
குஷ்பு
இது உண்மை..அவரது இழப்பை தாங்கும் சக்தி அவரது குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும். ஆர்த்தி அகர்வால் அதற்குள் சென்றுவீட்டீர்களே...ஆத்மா சாந்தியடையட்டும் என குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சமந்தா
ஆர்த்தி அகர்வாலின் ஆத்மா சாந்தியடையட்டும். மிகவும் இளம் வயதில் இறந்துவிட்டார். வருத்தமாக உள்ளது என்று சமந்தா ட்வீட் செய்துள்ளார்.
|
நானி
அதிர்ச்சியாக உள்ளது..ஆர்த்தி அகர்வால் இறந்துவிட்டார்..வாழ்க்கையை கணிக்கவே முடியவில்லை..வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
|
லக்ஷ்மி மஞ்சு
இல்லை! மேலும் ஒரு இளம் ஜீவன் சீக்கிரமே சென்றுவிட்டது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்த்தி அகர்வாலின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகை லக்ஷ்மி மஞ்சு ட்வீட் செய்துள்ளார்.
|
ராய் லட்சுமி
ஓ நோ! நான் கேட்பது உண்மையா? ஆர்த்தி அகர்வால் இறந்துவிட்டாரா? நம்பவே முடியவில்லை. அவர் வாழ்க்கையுடன் போராடியதை பார்த்துள்ளேன். வலுவான ஆத்மா அதற்குள்ளா, வருத்தமாக உள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
|
ஸ்ரியா ரெட்டி
ஆர்த்தி அகர்வால், இது மிகவும் வருத்தமாக உள்ளது. லிப்போ செய்ததால் அவர் இறந்தார் என்பதை கேட்கையில் அதை விட வருத்தமாக உள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகை ஸ்ரியா ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications