தேனி அதிமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு முன்னாள் எம்.பி. ரித்தீஷ் வாழ்த்து !
தேனி: தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவரான தேனி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனுக்கு நடிகரும், முன்னாள் எம்.பிமான ரித்தீ்ஷ் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் தேனி அ.தி.மு.க. வேட்பாளர் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 16 வது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 16 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், தமிழகத்தில் அ.தி.மு.க. 39 இடங்களில் போட்டியிட்டது. இதில் அதிமுக வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றனர். மேலும், இந்த இந்திய அளவில் அதிமுக 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இதில், அதிமுக சார்பில் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டவர் பார்த்திபன். இவர், தனக்கு அடுத்தபடியாக வந்த தி.மு.க. வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை விட 3,14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
(இந்த தொகுதியில் மொத்த வாக்குகள் 14,33,099. பதிவான வாக்குகள் 10,75,382. இதில் பார்த்திபன் (அ.தி.மு.க.) 5,71,254, பொன்முத்துராமலிங்கம் (தி.மு.க.) 2,56,722, அழகு சுந்தரம் (ம.தி.மு.க.) 1,34,362, ஆரூண் (காங்கிரஸ்) 71,432 வாக்குகள் பெற்றனர்)
இந்த நிலையில், தென் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் பார்த்திபனுக்கு, நடிகரும், முன்னாள் இரமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு பார்த்திபன் , ரித்தீஷ்க்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications