சமக சமந்தவோட கட்சி... ஆர்ஜே பாலஜியின் நிகழ்ச்சியில் வெளிப்பட்ட இளைஞர்களின் அரசியல் அறிவு
சென்னை: சதா சர்வ காலமும் ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களில் குடியிருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். ஒன்றரை கோடி இளைஞர்களின் வாக்குகளும் அப்படியே தங்களுக்குக் கிடைக்கும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லி வருகின்றனர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
இன்றைய இளையதலைமுறையினரின் அரசியல் அறிவு எப்படி இருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது ஆர்ஜே பாலாஜியின் இந்த நிகழ்ச்சி.
மருத்துவம் படிக்கும் இளம்பெண், எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் என 4 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில எத்தனை தொகுதி, ஆட்சியமைக்க மெஜாரிட்டி எத்தனை தொகுதிகள் தேவை? நாட்டின் பிரதமர் யார்? மோடி என்ன கட்சி என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன-
இதில் தொகுதிக்கு அர்த்தம் கேட்டார் ஒருவர். மோடியை காங்கிரஸ் கட்சி என்று கூறினார் மருத்துவம் படிக்கும் ஒரு மாணவி. சென்னை மேயர் விஜயகாந்த் என்றும் அதே மாணவிதான் சொன்னார்.
இதெல்லாம் தெரிந்து சொல்லப்பட்டதா அல்லது இன்றைய இளைய தலைமுறையினருக்கு அரசியல் அறிவு ஜீரோதானா என்பதே சந்தேகமாக உள்ளது.
இதை எல்லாம் விட சமக என்றால் எந்த கட்சி என்று பாலஜி கேட்ட கேள்விக்கு யாருக்கும் விடை தெரியவில்லை. ஒரு மாணவர் சமக என்றால் சமந்தா கட்சி என்று கூறி அதிர வைத்தார். சரத்குமார் கவனத்திற்கு!
பாலாஜியின் இந்த நிகழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் கேளுங்க...கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications