அதிமுக, திமுக வேட்பாளர்களின் பிளட் பிரசரை ஏற்றும் குக்கர்... கலக்கும் தினகரன்

எதிர்கட்சியினரின் பிரசரை அதிகரிக்கும் குக்கர் சின்னம் என்று முதல் நாளிலேயே அசத்தலாய் பேசினார் தினகரன் அது உண்மைதான் போல. பிரச்சாரத்தில் கலக்குகிறார் தினகரன்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரஷரில் வெடிக்கப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியும்.. மாஃபா பாண்டியராஜன் தடாலடி!

    சென்னை: ஆர்.கே.நகரில் தொப்பியோடு வலம் வந்த தினகரன் இப்போது தலையில் குக்கரை சுமந்து வலம் வருகிறார். பிரச்சாரத்தில் பெண்களில் தலைகளில் குக்கர்கள் பளபளக்கின்றன.

    ஆர்.கே நகருக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 கட்சியினர் போட்டியிட்டாலும் சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 49 பேர் களத்தில் இருக்கின்றனர்.

    பலம் வாய்ந்த சுயேட்சை வேட்பாளராக வலம் வருகிறார் தினகரன். அவர் கேட்ட தொப்பி கிடைக்கவில்லை. கிடைத்ததோ குக்கர்தான். அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் களத்தில் கலக்கி வருகிறார்.

    எதிர்களுக்கு பிளட் பிரசர்

    எதிர்களுக்கு பிளட் பிரசர்

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை வைத்து எனக்கு வெற்றி பெற தெரியும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கும் சின்னர் குக்கர் என்று கூலாக பதில் சொன்னார் தினகரன்.
    சொன்னது போலவே களத்தில் இறங்கி கலக்கி வருகிறார்.

    வெற்றிவேலின் குக்கர்

    வெற்றிவேலின் குக்கர்

    ஒரு பக்கம் தங்கத்தமிழ் செல்வன் எம்எல்ஏ குக்கரை பிடிக்க, இன்னொரு பக்கம் வெற்றிவேல் எம்எல்ஏ குக்கரை உயர்த்தி காட்ட உற்சாகமாக பிரச்சாரம் செய்கிறார் டிடிவி தினகரன். இல்லத்தரசிகளின் சமயலுக்கு குக்கர் எத்தனை அவசியம் என்று சொல்லி சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். என்ன தொப்பியை விட குக்கர் செலவு கொஞ்சம் அதிகம்தான்.

    பளபளக்கும் குக்கர்கள்

    பளபளக்கும் குக்கர்கள்

    குக்கர் சின்னம் கிடைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கான குக்கர்களை தொகுதிக்குள் இறக்கிவிட்டனர் தினகரன் ஆட்கள். வாக்கு சேகரிக்கப் போகும் போதே குக்கருடன் கிளம்புகின்றனர் பெண்கள். தலைமேல் குக்கர், கூடவே போடுங்கம்மா ஓட்டு என தினகரனுக்கு ஆதரவு களைகட்டுகிறது.

    அப்போ பழசு... இப்போ புதுசு

    அப்போ பழசு... இப்போ புதுசு

    முதல்நாள் தினகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் தங்களின் வீடுகளில் இருந்த பழைய குக்கரை எடுத்துக்காட்டி ஆதரவு கொடுத்தவர்களைப் பார்த்து தினகரன் மனது விசிலடித்தது. உடனே புத்தம் புது குக்கர்களை பிரச்சாரத்தில் இறக்கிவிட்டார். காசிமேடு தொடங்கி ஆர்.கே. நகரெங்கும் குக்கர்களின் ஊர்வலம் களைகட்டுகிறது.

    வலம் வரும் தொப்பி

    வலம் வரும் தொப்பி

    தொப்பி சின்னத்தை தொகுதி பக்கம் எட்டிப்பார்க்க விடக்கூடாது என்று தினகரன் தரப்பு மல்லுக்கட்ட, ஆனால் தொகுதி முழுக்க தொப்பியை காட்டி குக்கருக்கு விழும் ஓட்டை பிரிக்கணும் என்று ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது. எப்படியோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயேட்சைகள் என பலரது பிரசரையும் அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+