ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்... நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் தெரியுமா?
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 6 முனை போட்டி நிலவி வருகிறது. இந்தத் தேர்தலை கௌரவப் பிரச்சினையாகவே சில கட்சிகள் கருதுகின்றன.

பொதுவாக தேர்தல்களில் எதிரெதிர் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவக் கூடும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் இந்த இடைத்தேர்தலில் அந்த கட்சிகளுக்குள்ளேயே போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்த தேர்தலில் எப்படியாயினும் வென்று விட வேண்டும் என்று திமுகவும் துடிக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமாக ஆகியன போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. எனினும் தீபா பேரவை, இந்து மக்கள் கட்சி, சுயேச்சைகள் போட்டியிட உள்ளன.
இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டுதயம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications