ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் - நடத்தை விதிகள் அமல்
ஆர்.கே. நகரில் தேர்தல் நடததும் அதிகாரியாக ஆதி திராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே. வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக கே.வேலுச்சாமியை நியமனம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவர்களாக முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து காலியாக உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.
தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் யார் யார் என்று அரசியல் கட்சியினர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications