ஆர்.கே நகர் இடை தேர்தல்: சென்னை டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவ்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்ட மது கடைகளுக்கு ஏப்ரல் 10 முதல் 12 வரையும், 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்ட மது கடைகளுக்கு ஏப்ரல் 10 முதல் 12 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு என்னும் நாளான ஏப்ரல் 15 ம் தேதியும் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக இரு அணிகளும், திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.

அனல் பறக்கும் பிரச்சாரம், வாக்காளர்கள் சந்திப்பு என வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆர்.கே. நகரில் வலம் வந்து கொண்டுள்ளனர். இன்னும் 7 தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பணப்பட்டுவாடா பற்றி புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஏப்ரல் 15ஆம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நட்சத்திர ஹோட்கள், பார்களிலும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications