ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்பமனு வாங்கிய சிம்லா முத்துச்சோழன் - வாய்ப்பு கிடைக்குமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர். முதல்மனுவை கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் பெற்றார்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். திமுகவில் நேர்காணல் மூலம் வேட்பாளர் தேர்வு நடைபெற உள்ளதால் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. முதல்மனுவை கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் பெற்றார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானது. இந்த தொகுதியில் ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக அறிவிப்பு
ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் வருகிற 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12ஆம் தேதி மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பமனு
வேட்பாளர் நேர்காணல் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம். தலைமைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவத்தை ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

சிம்லா முத்துச்சோழன்
இதன்படி இன்று காலை முதல் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 1000 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். விண்ணப்ப மனுக்களை அறிவாலய அலுவலக மேலாளர் ஜெயக்குமார் விநியோகித்தார்.ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்து சோழன் முதலில் விருப்ப மனுவை வாங்கி சென்றார்.

வெற்றி பெறுவேன்
செய்தியாளர்களிடம் பேசிய சிம்லா முத்துச்சோழன் , கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார். விருப்பமனுக்களை அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளரை ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications