சென்னையில் இருக்கும் சின்ன ஏரியா... வேர்ல்ட் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.. கெத்து ஆர்.கே நகர்!

அகில உலக டிவிட்டர் டிரெண்டிங்கில் ஆர்.கே நகர் இடம்பிடித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரனின் கல கல பேட்டி- வீடியோ

    சென்னை: அகில உலக டிவிட்டர் டிரெண்டிங்கில் ஆர்.கே நகர் இடம்பிடித்து இருக்கிறது. காலை 11 மணியில் இருந்து ஆர்.கே நகர் உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்து, நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக டிவிட்கள் வெளியாகி வருவதால் அந்த வார்த்தை இந்த அளவிற்கு வைரல் ஆகி இருக்கிறது. மேலும் இன்னும் விடாமல் அந்த ஆர்.கே நகர் என்ற வார்த்தை டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.

    முதலில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ஆர்.கே நகர் டிரெண்டிங்கில் வரவில்லை. ஆனால் தற்போது உலக டிரெண்டிங்கில் ஆர்.கே நகர் இடம்பிடித்ததற்கு புதிய காரணம் சொல்லப்படுகிறது.

    உலக லெவல் டிரெண்டிங்

    உலக லெவல் டிரெண்டிங்

    பொதுவாக டிவிட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங் மட்டுமே நமக்கு காட்டப்படும். ஆனால் கூகுளில் இருக்கும் சில தளங்களை தேடிப்பார்த்தால் எந்த வார்த்தை உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். தொடர்ந்து இடைவிடாமல் அந்த விஷயம் குறித்து பேசினால் மட்டுமே டிரெண்டிங்கில் அந்த வார்த்தை இடம்பெற முடியும்.

    இடம்பிடித்தது

    இடம்பிடித்தது

    இதற்கு முன்பு தமிழ் வாழ்க என்ற வார்த்தை உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. அதன்பின் நடிகர் அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்த போது குட்டி தல என்ற வார்த்தை இடம்பிடித்து. தற்போது பல நாட்களுக்கு பின் ஆர்.கே நகர் தேர்தல் குறித்த ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் இடம்பிடித்து இருக்கிறது. #RKNagarElectionResult என்ற வார்த்தை டிரெண்டிங்கில் இருக்கிறது.

    முதல் இடம் வருமா

    முதல் இடம் வருமா

    மதியம் ஒரு மணிக்கு அதிகபட்சமாக இந்த ஹேஸ்டேக் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதேபோல் தேர்தல் முடியும் போது இன்னும் நிறைய டிவிட்கள் வரும் என்பதால் கண்டிப்பாக #RKNagarElectionResult ஹேஷ்டேக் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    குஜராத் தேர்தல் நடந்த போது கூட குஜராத் முடிவுகள் குறித்த ஹேஷ்டேக் வைரல் ஆகவில்லை. ஆனால் #RKNagarElectionResult வைரல் ஆனதற்கு காரணம் இருக்கிறது. அதன்படி பாஜக கட்சி நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று இருக்கிறது. மேலும் தினகரன் முன்னிலை வகிப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+