ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் மத்திய அரசின் ஆலோசனைப்படி நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவால் சென்னை ஆர்கே நகர் சட்டசபை தொகுதி காலியானது. இதையடுத்து அந்த தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தன. அப்போது வாக்களர்களுக்கு தினகரன் தரப்பு பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சசிகளும் புகார் அளித்தன.

ரத்து செய்த தேர்தல் ஆணையம்
இந்நிலையில்வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் டிடிவி.தினகரன் கோஷ்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

விரைவில் தேர்தல் - எதிர்பார்ப்பு
சட்டசபை தொகுதி காலியான அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தேல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஜூன் மாதத்துக்குள் ஆர்கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஓராண்டு ஆகுமாம்
ஆனால் ஓராண்டுக்குள் ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதுவும் மத்திய அரசின் ஆலோசனைப்படிதான் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெபாசிட் தொகையை பெறலாம்
மேலும் வேட்பாளர்கள் 15 நாட்களுக்குள் தாங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications