ஆர்.கே.நகரில் அதிர்ச்சி.. டெபாசிட்டை பறி கொடுத்தது திமுக!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் வாங்குமா என்ற பரபரப்பு சூழல் உருவாகியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக டெபாசிட்ட்டை பறி கொடுத்து தோற்றுள்ளது.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. சுமார் மாலை 5.20 மணியளவில் இறுதி ரிசல்ட்டுகள் வெளியாகின. இந்த தேர்தலில், ஆரம்பம் முதலே சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார்.
தொடக்கம் முதலே அதிமுக 2வது இடத்தில் இருந்தது. அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் மருதுகணேஷ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

வாக்குகள் நிலவரம்
2ம் சுற்றின்போது, ஒருகட்டத்தில் தினகரன், 10,421 வாக்குகளும், மதுசூதனன், 4521 வாக்குகளும் பெற்றிருந்தனர். மருதுகணேஷ் 2324 வாக்குகள் பெற்றிருந்தார்.

டெபாசிட் கேள்விக்குறி
நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் இதைவிட மிக குறைவாக அதாவது முறையே 459 வாக்குகளும், 117 வாக்குகளும் பெற்றிருந்தன. இந்த அடிப்படையில் வாக்குகள் செல்லுமானால் திமுக மற்றும் அதற்கும் கீழே வாக்குகள் பெற்றுள்ள பாஜக, நாம் தமிழர் ஆகிய பிற கட்சிகள் டெபாசிட் வாங்குமா என்பது அப்போதே கேள்விக்குறியாகியானது.

டெபாசிட் கிடைக்குமா?
ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க, வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். ஆர்.கே.நகரில் மொத்தம், 1.76 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

6ல் ஒரு பங்கு வாக்குகள்
எனவே அதில் 6ல் ஒரு பங்கு வாக்குகளான குறைந்தபட்சம் 29481 வாக்குகளையாவது பெற்றால்தான் டெபாசிட் கிடைக்கும். ஆனால் மருதுகணேஷ் மொத்தம் 24651 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவர் டெபாசிட்டை இழந்தார். திமுக வாக்கு 13.9 சதவீதம் மட்டுமே. இதேபோல நாம் தமிழர், பாஜக கட்சி வேட்பாளர்கள் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இது திமுக தொண்டர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வாக்குகள்
திமுக போலவே, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் டெபாசிட்டை பெறாததற்கு தினகரன் தனியாளாக 50 விழுக்காடுகள் வாக்குகளை அள்ளியதும், மதுசூதனன் 48306 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதும் காரணம். இவர்களே அதிக வாக்குகளை ஈர்த்து, பிற கட்சிகளுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை தடுத்துவிட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications