மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணாகுது.. ஆர்.கே.நகரில் 3 ஆண்டுகளில் 3வது முறையாக தேர்தல்!
கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது தமிழகமே பெரும் எதிர்பார்க்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி.
சென்னை: தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது ஆர்.கே.நகர் தொகுதி.
தமிழகத்தின் சிறிய தொகுதிகளில் ஒன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதி. 1977-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. முதல் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியை அதிமுகவின் நடிகர் ஐசரிவேலன் வென்றார்.
அதன்பின்னர் காங்கிரஸ் 2 முறை தொடர்ச்சியாக வென்றது. 1989-ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் மறைந்த எஸ்.பி. சற்குணமும் வென்றார். 1991-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனும் 1996-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் எஸ்.பி. சற்குணமும் வென்றார்.

அதிமுக கோட்டை
ஆனால் 2001-ம் ஆண்டுக்குப் பின்னர் இது அதிமுக கோட்டையாக ஆர்.கே.நகர் தொகுதி உருவெடுத்தது. அதிமுகவில் இருந்த சேகர் பாபு 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். இதையடுத்து 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் பி. வெற்றிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இடைத் தேர்தல்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அவர் போட்டியிடுவதற்காக வெற்றிவேல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அத்தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா வென்றார்.

மீண்டும் ஜெ.
பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

3 ஆண்டுகளில் 3வது தேர்தல்
தற்போது ஏப்ரல் 12-ந் தேதியன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஆர்.கே.நகர் தொகுதி எதிர்கொள்ளும் 3-வது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications