ஆர்கே நகர் பணப்பட்டுவாடா புகார்... தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் விநியோகம் செய்வதாக தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் அணி, நாம் தமிழர் கட்சி, பாஜக என 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் இந்த தொகுதியில் பணமழை பெய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பணப்புகார் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவுடன் அனைத்து கட்சியினர் ஆலோசனை செய்தனர்.
அப்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கட்சியினர் மீது பணப்புகார் கூறினர். நேற்று ஒரே நாளில் ரூ. 100 கோடி பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தினகரன் அணியினரும் வீடு வீடாக சென்று குக்கரையும், பணத்தையும் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தினகரன் ஆதரவாளர் செல்வி என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் புகார் தொடர்பாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் 11 வழக்குகளின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications