ஆர்.கே.நகர்: நம்பர் 1 மது சூதன்.. 2 திமுக.. 3 தினகரன்.. கேவலமான இடத்தில் பாஜக, தேமுதிக: ஜூவி சர்வே
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கே வாக்களிப்போம் என்று 33.71% பேர் கூறியுள்ளதாக ஜூனியர் விகடன் நடத்திய சர்வே தெரிவித்துள்ளது.
சென்னை : ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனுக்கே வாக்களிப்போம் என்று 33.71% பேர் கூறி உள்ளதாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு வாக்களிப்போம் என்று 23.53% பேர் கூறியுள்ளனராம்.
ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால் ஊடகங்களின் சர்வேயில் ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து தெரிவிக்கின்றன.

62 வேட்பாளர்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 62 வேட்பாளர்கள் உள்ளனர். 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. திமுக, பாஜக, தேமுதிக என பிரபல கட்சிகளைத் தவிர பிளவுபட்ட அதிமுக புதிய சின்னத்தில்தான் போட்டியிடுகிறது.

பலமுனை போட்டி
மதுசூதனன், டிடிவி தினகரன், மருதுகணேஷ், கங்கை அமரன், தீபா, மதிவாணன், கலைக்கோட்டுதயம், லோகநாதன் என பல வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். பலமுனைப் போட்டி நிலவுகிறது.

ஜூனியர் விகடன் சர்வே
ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. 3731 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தொப்பி, இரட்டை விளக்கு மின் கம்பம், படகு, சூரியன், தாமரை என சின்னங்கள் அடங்கிய படிவம் கொடுத்து சர்வே நடத்தப்பட்டது.

ஓபிஎஸ் அணிக்கு வாய்ப்பு
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 33.71% பேர் கருத்துக் கூறியுள்ளனர். அவருக்கு மொத்தம்1258 பேர் வாக்களித்துள்ளனர்.

மருதுகணேஷ் - டிடிவி தினகரன்
திமுகவின் மருதுகணேஷ் 23.53% மக்களின் ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் டிடிவி தினகரன் 15.36% மக்களின் ஆதரவுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பாஜக 4வது இடம்
பாஜகவின் கங்கை அமரன் 4.05% ஆதரவுடன் 4வது இடம் பிடித்துள்ளார். அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 5வது இடம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 6வது இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன் 7வது இடத்திலும் இருக்கிறார்.

தேமுதிக ரொம்பக் கேவலம்
ஆளுக்கு முதலாக வேட்பாளரை அறிவித்த விஜயகாந்த் கட்சியை ஆளையே காணவில்லை. அவரது கட்சி வேட்பாளருக்கு வெறும் 0.86% பேர் மட்டுமே ஆதரவாக டிக் அடித்துள்ளனர். இவர்களில் யாருக்குமே வாக்களிக்கப் போவதில்லை என்று 11.98% பேர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications