இடைத் தேர்தலில் முதல்முறையாக சுயேச்சை வெற்றி.. தினகரன் சாதனை
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனை படைத்துவிட்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பணப்புகாருக்கும் பஞ்சமில்லாத நிலையில் இதன் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்கே நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.
வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் அதிமுக 48306 வாக்குகளும், திமுக 24624 வாக்குகளும், தினகரன் 89013 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தினகரன் வெற்றி பெற்றுவிடுவார்.
கலைகோட்டுதயம் 3645 வாக்குகளையும் பாஜகவின் கரு நாகராஜன் 1236 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.
இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை என்ற சாதனையை அவர் படைத்துவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications