பாஜக, அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகரில் கடும் அதிருப்தி- ராஜநாயகம் குழு சர்வே முடிவுகள்
மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மைய சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையத்தின் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையத்தின் 27 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. 156 தெருக்களில் 3120 வாக்காளர்களை சந்தித்து இந்த கருத்து கணிப்பை நடத்தியது.

கடும் அதிருப்தியே பதில்
இதில் மத்திய பாஜக, தமிழக அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறிதத்தும் ஓகி புயலில் மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்திலுமே மத்திய- மாநில அரசுகள் மீது மிக மிக கடும் அதிருப்தியையே வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

நான்கில் 3 பேர் அதிருப்தி
ஒன்றரை ஆண்டுகால அதிமுக ஆட்சி படுமோசம் என்பது 73.3% பேர் கருத்து. சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை என 22.1% பேரும் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என 4% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்சகட்ட அதிருப்தி
மத்தியில் நடைபெறக் கூடிய பாஜக படுமோசம் என 85.6% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை என 7.9% பேரும் சிறப்பான ஆட்சி என 6.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடும்கோபம்தான்...
மத்திய மாநில அரசுகள் ஓகி புயலைக் கையாண்ட விதம் ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் நிறைவைத் தர வில்லை. இந்த புயலை மத்திய- மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம் என 93.5% பேர் கூறியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே செய்யவில்லை என 6.5% கூறியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டது என ஒருவர் கூட சொல்லவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications