போட்ட கெட்டப் எல்லாம் வேஸ்ட்... ஆர்.கே.நகரில் தீபா பிரச்சாரத்தை பார்க்க முடியாம போச்சே!
சமீப காலமாக புதிய ஸ்டைலில் வலம் வந்த தீபாவின் புதிய கெட்டப்களை ஆர்கே நகர் தேர்தலில் பார்க்கலாம் என்றால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : கடந்த ஒரு மாதமாக புதிய ஸ்டைலில் அசத்தலாக வந்த ஜெ.தீபாவின் புதிய கெட்டப்களை ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பளார் மதுசூதனன் மற்றும் தினகரனனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஜெ. தீபாவின் வேட்பு மனு போதிய அளவு பூர்த்தி செய்யப்படாததால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரம் வரை சென்ற ஜெ. தீபா இந்த முறை பாரம் 26ஐ அரைகுறையாக பூர்த்தி செய்ததால் வேட்பு மனு தாக்கலுடனேயே அவருடைய தேர்தல் களம் நிறுத்தப்பட்டு விட்டது. ஜெ. தீபாவின் மனு மீதான பரிசீலனை நடந்த போது அவரது கட்சி சார்பில் ஒருவர் கூட தேர்தல் அலுவலகத்தில் இல்லை என்பது தான் கூடுதல் விஷயம்.

ப்ரெஷ்ஷாக காட்சி தந்த தீபா
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மீடியாக்களின் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிய கால கட்டம் முதலே தனது ஆடை, அலங்காரத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தீபா. அண்மைக் காலமாக புதுப்பொலிவுடன் காட்சியளித்திருந்தார்.

பளிச் தீபாவாக மாறினார்
பளிச் நிற சேலை, போனிடெய்ல் என்று சற்று மெருகேறியவாறு காட்சியளித்தார் தீபா. பொது நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகள் என்று எங்கு சென்றாலும் பளிச் என்று காட்சியளித்தார் தீபா.

திட்டமிடவில்லை
இந்த திடீர் பொலிவிற்கான காரணத்தையும் தீபா சொல்லி இருந்தார். அதில் எதையும் திட்டமிடுவதில்லை, என்ன தோன்றுகிறதோ அதைத் தான் செய்கிறேன், மற்றவர்களை காப்பி அடிப்பதில்லை என்று கூறி இருந்தார்.

ப்ரீஹேர்ஸ்டைல் ராசியில்லையா
நேற்று மனு தாக்கலுக்கு வந்த போது ப்ரீஹேர்ஸ்டைலில் தீபா வந்திருந்தார். அப்போதே பலரும் தலைவிரி கோலம் ஆகாது என்று கூறி இருந்தனர், கடைசியில் அது அவருக்கே ஆகாமல் போய்விட்டது.

அப்ப இல்லையா?
ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீபாவின் புதுப்புது ஸ்டைல்களைப் பார்க்க காத்திருந்த மீடியாக்களுக்கும் வாக்காளர்களுக்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது ஏமாற்றத்தையே தந்துள்ளது. இதனால் ஆர்கே நகரில் போட்டியிடாமலே தீபாவின் 'படகு' கவிழ்ந்துவிட்டது.












Click it and Unblock the Notifications